குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட ஏழு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சென்னைப் புறநகர் தொடர்வண்டி நிலையம் அருகே குவிந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கைகளில் கொடிகள், பதாகைகளுடன் மத்திய தொடர்வண்டி நிலையம் நோக்கி முன்னேறினர்.
அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்ததால் சாலைத் தடுப்புகளைத் தூக்கி வீச முயன்றார்கள். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.