சென்னை: ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையின் புது கல்லூரிக்கு எதிரேயுள்ள பழமையான ஐந்து மாடி கட்டடம், திடீரென்று பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது.
முன்னாள் எம்பிக்கு சொந்தமான 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து! - chennai building collapse
ராயப்பேட்டையில் உள்ள முன்னாள் காங்கிரஸ் எம்பியின் மனைவிக்குச் சொந்தமான 45 ஆண்டுகால பழமையான 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து. குடியிருப்புவாசிகள் இல்லாமல் கட்டடம் பயனற்று இருப்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்.
இதனால் சாலைகளில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், தேனாம்பேட்டை ஆகிய நான்கு இடங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்த கட்டடம் 45 வருட கால பழைமையானது எனவும், பயன்பாடு இல்லாமல் கிடப்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிடமானது முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஆரூனின் மனைவிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.