தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிவேக பயணம் உயிரைப் பறிக்கும்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி! - Chennai Bike Accident

சென்னை அருகே இன்று(ஏப். 13) அதிவேகமாக வந்த பைக், பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் இவ்விபத்து குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி

By

Published : Apr 13, 2022, 9:50 PM IST

சென்னை: அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது நண்பர் அரவிந்தன். இருவரும் இன்று(ஏப். 13) காலை பைக்கில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்துவிட்டு, பிறகு பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு அதிவேகமாக சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, வடபழனியில் இருந்து பெசன்ட்நகர் பேருந்து நிலையம் நோக்கிச்செல்லும் மாநகரப் பேருந்து 5E பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் அதிவேகமாக வந்த பைக், பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது, பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இவ்விபத்தில் ஜெகதீசன், அரவிந்தன் ஆகிய இருவரும் பேருந்து சக்கரத்தின் பக்கவாட்டில் விழுந்தனர்.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி

இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஜெகதீசன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து பதிவாகியுள்ள அங்கிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றினர். மேலும் பேருந்து ஓட்டுநரான கோயம்பேட்டைச் சேர்ந்த அசோகன் என்பவரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'KTM பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்: முதியவர் மீது மோதி விபத்து: பதறவைக்கும் காட்சிகள்'

ABOUT THE AUTHOR

...view details