தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மஞ்சுவிற்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு விரைவாகச் சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர், அவரை மீட்டு மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
ஆனால், செல்லும் வழியில் அவசர ஊர்தியிலேயே மஞ்சுவிற்குப் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.