தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

68 வயது முதியவர் எண்ணெய் சேமிப்பு கிடங்கு பள்ளத்தில் விழுந்து பலி - அயனாவரம் காவல்துறை

சென்னை: 68 வயது முதியவர் ஒருவர், எண்ணெய் கடையின் சேமிப்பு கிடங்கிற்கு போடப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எண்ணெய் சேமிப்பு கியங்கு பள்ளத்தில் விழுந்து 68 முதியவர் பலி

By

Published : May 8, 2019, 3:55 PM IST

அயனாவரம் புதுத் தெருவைச் சேர்ந்த மதுசூதனன்(68). இவர் இன்று காலை 10:30 மணியளவில், அருகாமையில் உள்ள எண்ணெய் கடைக்கு சென்றுள்ளார்.

அந்த கடையில் எண்ணெய்களை சேமித்து வைப்பதற்காக தரைதளத்தில் 30 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு போதிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு இன்றி பணிகள் நடந்து வந்த நிலையில், கடைக்கு வந்த மதுசூதனன் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதில் அவரது முகத்தில் கான்கிரீட் கம்பிகள் குத்தி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் காவல்துறையினர், முதியவர் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணைகாக, கடை உரிமையாளர் உள்பட அனைத்து ஊழியர்களையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details