தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக 60 ஆப்பிள் ஐபேட்! - chennai assembly cv shanmugam announcements

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளையிலுள்ள நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக 60 ஆப்பிள் ஐபேட்கள் வழங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

chennai assembly cv shanmugam announcements
chennai assembly cv shanmugam announcements

By

Published : Mar 21, 2020, 2:08 PM IST

அமைச்சர் வெளியிட்ட மானியக் கோரிக்கை மீதான 2020-2021 நீதி நிர்வாக அறிவிப்புகள்:

  • தமிழ்நாட்டில் உள்ள 260 நீதிமன்ற வளாகங்களில் தலா (இரண்டு வீதம்) மின்னணு பெயர் பலகைகள், இதர உபகரணங்கள் ரூபாய் 10.26 கோடி செலவில் வாங்கி நிறுவப்படும்.
  • திருச்செங்கோட்டில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய பழமைவாய்ந்த நீதிமன்ற கட்டடங்களைப் பாதுகாப்பதற்கென ரூ. 10.00 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக் கிளையில் உள்ள நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக உறையுடன் கூடிய 60 ஆப்பிள் ஐபேட் (Apple I pads) 80.93 லட்சம் செலவில் வாங்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்படக்கூடிய சாட்சி, சிறார்கள் சாட்சி ஆகியோரை விசாரிக்கும் மையம், நீதிமன்ற அறைகள் ரூபாய் 288.28 செலவில் அமைக்கப்படும்.
  • புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • குற்றவழக்குத் தொடர்புத் துறையில் பணிபுரியும் 16 குற்றவழக்கு தொடர்வு உதவி இயக்குநர்களுக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஜீப் வழங்கப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • தருமபுரி மாவட்டம் அரூரில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூபாய் 8.60 கோடி செலவில் கட்டப்படும்.
  • ஐந்து புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  • வழக்குரைஞர் எழுத்தர்களின் சேமநல நிதி உயர்த்தி வழங்கப்படும்.
  • இளம் வழக்குரைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details