சென்னை: அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே ஜி.ஜி காம்ப்ளக்ஸில் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள தேவராஜ் கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் குடோனில் இன்று (ஜூலை 22) மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், அந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.