சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை மையத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், "சென்னைக்கு 100 கி.மீ, புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உள்மாவட்டம், இதர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.