கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 2015ஆம் ஆண்டு 740 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது.
இதையடுத்து துறைமுக சுங்கத்துறை அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து மணலியில் உள்ள வேதிப்பொருள் கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர். அவற்றில் 43 டன் அமோனியம் நைட்ரேட் வெள்ளம், ஆவியாதல் காரணமாக வீணானது. தற்போது 697 டன் மீதமுள்ளது.
இந்த நிலையில் லெபனான் நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நிகழ்ந்த பெரும் விபத்தின் எதிரொலியாக, மணலியில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள 697 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை, கிடங்கில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
ஏற்கனவே அம்மோனியம் நைட்ரேட்டை 2, 3 நாள்களில் அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.