தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை அழகப்பா பள்ளியின் புதிய கின்னஸ் சாதனை! - 1714 மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு பாடம்

சென்னை: அழகப்பா பள்ளியில் 1,714 மாணவர்களுக்கு 40 நிமிடங்கள் வரை இயற்கை பாதுகாப்பு குறித்து பாடம் நடத்தி புதிய கின்னஸ் சாதனையை அப்பள்ளி படைத்துள்ளது.

Chennai alagappa school

By

Published : Sep 5, 2019, 10:34 PM IST


சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளியில் இயற்கை பாதுகாப்பு குறித்து பாடம் நடத்தும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் 1,714 மாணவர்கள் கலந்துகொண்டு 40 நிமிடங்கள் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து இயற்கை பாதுகாப்பு பாடத்தை கேட்டனர். இதற்கு முன்னதாக 1,479 மாணவர்கள் கொண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அதனை முறியடித்து அழகப்பா பள்ளி புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி தலைவர் நரேஷ் குமார், இந்த உலக சாதனையை படைக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது, அதன் வெளிப்பாடாக இந்த சாதனை படைத்திருக்கிறோம். இந்த சாதனையை படைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். அதை தொடர்ந்து இறுதியாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றுகளை அதன் தென்னிந்திய பொறுப்பாளர் விவேக், பள்ளி தலைவர் நரேஷ் குமாரிடம் வழங்கினார்.

சென்னை அழகப்பா பள்ளி புதிய கின்னஸ் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details