சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான முனையத்திற்குப் பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், பன்னாட்டு விமான முனையத்திற்கு, பயணிகள் மூன்று மணி நேரம் முன்னதாகவும் வர வேண்டும்.
திரவப் பொருட்கள், அல்வா, ஊறுகாய், ஜாம் போன்றவைகள் எடுத்துச் செல்லாமல் தவிர்க்க வேண்டும். விமான நிலையத்தில் காா் பாா்க்கிங், பயணிகள் பாதுகாப்பு சோதனை பகுதிகள், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பாா்சல்கள் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.