சென்னை: கரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருள்களுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டா்கள், வென்டிலேட்டா்கள் உள்ளிட்ட மருந்துவ உபகரணங்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன் சென்னையிலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட தோல் பொருள்கள், மீன், நண்டு, காய்கறிகள், பழங்கள் எனப்பெருமளவு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.