தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேகமாக வந்த பயணி... உடைந்த கண்ணாடி கதவு! - சென்னை விமான நிலையம்

சென்னை: விமான நிலையத்தின் சா்வதேச முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கண்ணாடி கதவு இன்று (பிப். 03) காலை உடைந்து நொறுங்கியது.

விமான நிலையம்
விமான நிலையம்

By

Published : Feb 3, 2021, 10:50 AM IST

சென்னை விமான நிலையம் வசதிகளுடன் 2012ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வரை 84 முறை கண்ணாடி தடுப்புகள், கதவுகள் விழுந்து நொறுங்கியுள்ளன.

பின்னர் தொழில்நுட்ப வல்லுநர் உதவியுடன் கண்ணாடிகள் விழாமல் இருக்க விமான நிலைய ஆணையக அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விமானநிலையத்தில் உடைந்த கண்ணாடி கதவு
இந்த நிலையில் சென்னை பன்னாட்டு முனையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்த பயணிகள் இ-பாஸ் போடும் அறைக்குச் சென்றனர். அப்போது அங்கு செல்ல வந்த பயணி ஒருவர் டிராலியை தள்ளிக்கொண்டு வந்தார். வேகமாக வந்த பயணி திடீரென அங்கிருந்த 6 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவில் இடித்தார். இதில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது.
கண்ணாடி கதவிற்கு பதிலாக தடுப்பு அமைக்கப்பட்ட பகுதி

அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே விமான நிலைய ஊழியர்கள் வந்து கண்ணாடி சிதறல்களை அகற்றி தடுப்புகளை அமைத்தனர்.

இதையும் படிங்க: 'தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா' - நினைவு கூர்ந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details