சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று 48 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் 24 விமானங்கள், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள். 24 விமானங்கள் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள்.
சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, கவுகாத்தி, புவனேஷ்வர், திருவனந்தபுரம், கொச்சி, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட 24 இடங்களுக்கு சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்ல சுமாா் 3,350 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா சோதனை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா சோதனை அதேபோல் இந்த இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 24 விமானங்களில் சுமாா் இரண்டாயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இன்று ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் 48 உள்நாட்டு விமானங்களில், சுமாா் 5,300 பயணிகள் பயணிக்கின்றனா். அதில் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரையும் விமான நிலைய அலுவலர்கள் தெர்மாமீட்டர் கொண்டு பரிசோதனை செய்கின்றனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு தளர்வு: விமான பயணச் சீட்டுகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு!