சென்னை: துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேக் முகமது (27) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடமைகளை சோதனையிடுகையில், அவரது உடைமைகளில் ரூ. 1 லட்ச மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல் - Indigo Airlines passenger flight
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன்பின் அவரை தனி அறைக்கு கொண்டு சோதனை நடத்தினா். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 260 கிராம் தங்கப் பசையையும் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த, சென்னையைச் சேர்ந்த ஜாவித் அலி (30) என்ற பயணியை சோதனையிட்டனர். அவருடைய பேண்ட் பாக்கெட் மடிப்புக்குள் தங்க நாணயம், தங்கச் செயின் மறைத்து வைத்து தைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 223 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தனா். இரண்டு பயணிகளையும் சுங்கத்துறை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: புதையல் ஆசையில் விவசாயி நரபலி... வாட்ச்மேன் கொடுத்த பகீர் வாக்குமூலம்....