தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிக்கை - student attacked by cops in chennai

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

By

Published : Jan 26, 2022, 7:00 AM IST

சென்னை: கொடுங்கையூரில் முகக் கவசம் அணியாமல் வந்ததற்காக சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் பெண் காவல் ஆய்வாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்துல் ரஹீம் தரப்பிலிருந்து நேற்று(ஜன.25) சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இந்த மனுவை ஜிம்ராஜ் மில்டன், மோகன கிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கொடுத்தனர். இந்த மனு குறித்து வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் கூறுகையில், "சட்டக்கல்லூரி மாணவர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரே விசாரித்து வருவது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மனு குறித்து இரண்டு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பதாக டிஜிபி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - இரு காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details