சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எனினும் மாநகராட்சி தொடர்ந்து முயற்சிசெய்துவருகிறது. அந்த வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து தினமும் வீதி வீதியாக மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி நேற்று மட்டும் 533 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.
சென்னையில் ஒரே நாளில் 533 மருத்துவ முகாம்கள்! - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை: நேற்று மட்டும் 533 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Chennai 533 medical camps held
இதில் 36,671 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிறு அறிகுறியுடன் இருந்த 1,198 நபர்கள் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.