திராவிட விடுதலை கழகம் சார்பில் ரசாயன வண்ண பூச்சுகள் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது என, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து திராவிட விடுதலை கழகத்தினர் பேசுகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்பினர் கோயில்களின் முன்பு லாப நோக்கத்திற்காகவே மட்டுமே சிலை வைக்கின்றனர்.
திராவிட விடுதலை கழகத்தினர் ரசாயன பூச்சுகள் மூலம் செய்யப்பட்ட சிலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. அவ்வாறு செய்யப்படும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
பின்னர், 10 அடிக்கு மேல் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்படும் சிலைகளை அகற்றவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ரசாயன பூச்சுகள் மூலம் செய்யப்பட்ட சிலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மேலும் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சிலைகள் அமைக்க வழங்கிய உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.