தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னணி மோட்டார் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்! - cheif minister wrote letter

சென்னை: மோட்டார் வாகன துறையில் தலைசிறந்த 11 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

cheif minister
cheif minister

By

Published : Jun 4, 2020, 8:23 PM IST

வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு நாடுகளுக்கான சிறப்பு அமைப்புகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.

இதன்தொடர்ச்சியாக, உலகளவில் மோட்டார் வாகன துறையில் தலைசிறந்த 11 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

வோக்ஸ் வேகன் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஹெர்பர்ட் டையஸ், ஸ்கோடா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பெர்ன்ஹார்டு மையர், உள்ளிட்ட 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவெடுத்துள்ளன. அம்முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் “முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக் குழு” (Special Investment Promotion Task Force) தலைமைச் செயலாளர் தலைமையில் அமைத்துள்ளார்.

அண்மையில் 15ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details