தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா எதிரொலி: துபாயிலிருந்து சென்னை வந்த நபர் பொது இடங்களில் சுற்றுவதாக புகார்

சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த நபர் வீட்டுக் கண்காணிப்பில் இல்லாமல், வெளியே சுற்றுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த பிரபாகரன் என்பவர் வீட்டு கண்காணிப்பில் இல்லாமல், வெளியே சுற்றுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த பிரபாகரன் என்பவர் வீட்டு கண்காணிப்பில் இல்லாமல், வெளியே சுற்றுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

By

Published : Mar 24, 2020, 11:17 PM IST

நாடு முழுவதும் கரோனாவின் பாதிப்பு அதிகமாகி வருவதால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நபர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துபாயிலிருந்து சென்னை வந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வரும் சூழ்நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை வெளியில் செல்லாமல் 28 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்நபர் வீட்டுக்குள்ளேயே இருக்காமல் அடிக்கடி பொது இடங்களுக்குச் சென்றதாகவும், சுகாதார விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் வீட்டிற்குச் சென்ற சுகாதாரத் துறை அலுவலர்கள் வெளியில் வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதையும் மீறி செயல்பட்டதாக அந்நபர் மீது மாநகராட்சி மண்டல அலுவலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க:தீவிர கண்காணிப்பில் வெளிநாட்டிலிருந்து வந்த 112 பேர்’ - ஆட்சியர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details