தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டய கணக்காளர் தேர்வு - மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு - பட்டயக் கணக்காளர்

சென்னை: பட்டயக் கணக்காளர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

exams
exams

By

Published : Jun 15, 2020, 7:37 PM IST

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் சிஏ எனப்படும் பட்டயக்கணக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வரும் ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் தேர்வுகளை, விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம். ஜூலையில் எழுத இயலாத மாணவர்கள் ’opt-out’ எனும் வாய்ப்பினை தேர்வு செய்து, வருகின்ற நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க முடியும்.

ஏற்கனவே தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வு எழுத மாணவர்கள் வேறு மையங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், சிஏ தேர்வில் பங்கேற்க வரும் ஜூலை மாதத்தோடு கெடு முடியும் மாணவர்களுக்கு, நவம்பர் மாதம் வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மே மாதம் நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு ஜூன் மாதத்திற்கும், பின்னர் ஜூலை மாதத்திற்கும் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிபிஎஸ்சி மாணவர்கள் பொதுத்தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்

ABOUT THE AUTHOR

...view details