தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2021, 2:17 PM IST

ETV Bharat / city

சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்துவதால் மாணவர்களுக்கு நன்மையும், பாதிப்புகளும் இருக்கிறது. நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து மாநில அரசையும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்
சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடப்புக் கல்வியாண்டில் மாற்றங்கள்செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலை தவிர்க்க, புதிய முடிவை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு முறை

சிபிஎஸ்இ அறிவிப்புகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் சிறப்பு மதிப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்படும். அதன்படி கல்வியாண்டை இரண்டாக பிரித்து தேர்வு நடத்தப்படவுள்ளது.

அதன்படி மொத்த பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என்று தேர்வு நடத்தப்படும். பள்ளிகள் சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும், கரோனா சூழல் சரியாகும்வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். சிபிஎஸ்இ ஒவ்வொரு பருவ முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும்.

சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்

அறிவிப்பினால் உண்டாகும் பாதிப்புகள்

இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது, "மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ தேர்வுகள் ஆண்டில் இரண்டு பருவமாக நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். முதல் பருவத்தில் 50 விழுக்காடு, பாடத்தில் கேள்குறிவகை தேர்வும், இரண்டாம் பருவத்தில் மீதமுள்ள 50 விழுக்காடு, பாடத்தில் எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பருவத் தேர்வினை எழுதும்போது நன்மையும், பாதிப்புகளும் உள்ளன.

சிபிஎஸ்இ தேர்வு முறை

மாணவர்கள் பொதுத்தேர்வினை ஆண்டில் இரண்டு முறை எழுதும்போது மன அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டுவரும் வாய்ப்புகளை இழக்க நேரிடும். தனித்திறன்களை கல்லூரிகளில் அதிகப்படுத்துவதை விட பள்ளிகளில் அதிகரிக்க முடியும்.

எப்படி ஒப்பீடு செய்ய முடியும்..

இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்தப் பின்னர் மத்திய கல்வி அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும். தேர்வினை ஒவ்வொரு வாரியமும், ஒவ்வொரு முறையில் நடத்துவோம் என்பது சரியாக இருக்காது. இதனால் மாணவர்கள் சேர்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு ஆண்டிற்கான பாடத்திட்டத்தினை ஆண்டில் இரண்டு முறை எழுதும் மாணவர்களுடன், 100 விழுக்காடு பாடத்திட்டத்தையும் ஒரே ஆண்டில் எழுதும் மாணவர்களுடன் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்.

சிபிஎஸ்இ தேர்வு முறை

கடந்த சில ஆண்டுகளாக பாடத்திட்டம், தேர்வு, மாணவர்கள் சேர்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டுவரும்போது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறோம். மேலும், தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரும்போது முதலில் பரிசோதனை முறையில் செய்துபார்த்துவிட்டு, பின்னர் நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

மாணவர்களின் நலன் கருதி

மாணவர்களுக்கு கேள்குறி வகையில் தேர்வு நடத்தும்போது, அதனை தகுதியானதாக கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், பெற்றோர்களுக்கு பொருளாதாரம் பாதிப்பு இல்லாத வகையில் கொண்டுவர வேண்டும். நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களின் கல்வியின் தரத்தையும் உயர்த்தும் வகையில், அனைத்து மாநில அரசையும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details