தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வுமையம்

சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடமாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

By

Published : Sep 30, 2019, 11:39 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரியின் பெரும்பான்மையான இடங்களில் இன்று முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details