தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் தமிழ்நாட்ட்ல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

By

Published : Jan 20, 2021, 1:38 PM IST

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,

வட கிழக்கு பருவ மழை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்றும், நாளையும் தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜனவரி 22 முதல் 24ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் கடந்த 15 நாள்களில் 330 மில்லி மீட்டர் மழை பதிவு!

ABOUT THE AUTHOR

...view details