தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு - நீலகிரியில் கனமழை

தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக, நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை
கன மழை

By

Published : Jun 17, 2021, 1:25 PM IST

Updated : Jun 17, 2021, 1:43 PM IST

சென்னை: தென்மேற்குப்பருவக் காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

18.6.2021:மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
19.6.2021, 20.6.2021:வெப்பச்சலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
21.6.2021:தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
அவலாஞ்சி (நீலகிரி) 21, மேல் பவானி (நீலகிரி) 12, எமெராலட் (நீலகிரி) 11, சின்னக்கல்லார் (கோவை) 10 , பந்தலூர் (நீலகிரி) 9, வால்பாறை (கோவை) 8, சின்கோனா (கோவை) 7, பெரியாறு (தேனி) 6, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) 5, பாபநாசம் (திருநெல்வேலி) 4, தென்காசி 3, ஏற்காடு, திண்டிவனம்(விழுப்புரம்) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
வங்கக் கடல் பகுதிகள்
17.6.2021, 18.6.2021:மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
17.6.2021, 18.6.2021: வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
17.6.2021,18.6.2021: வடக்கு வங்கக் கடல் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.6.2021 முதல் 19.6.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

17.06.2021 முதல் 21.06.2021 வரை:தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் பலத்த காற்று வீசும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : 'ரூ. 61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்' - முதலமைச்சர் அறிவிப்பு

Last Updated : Jun 17, 2021, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details