தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்தார். அதற்கான காணொலி ஆதாரங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியானது.
ஓபிஎஸ் மகனின் பதவி தப்புமா? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..!
சென்னை: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பணம் கொடுத்து அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வந்தபோது தேர்தல் ஆணையம் அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. ஆனால், தேனி தொகுதியில் ஏன் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தலைத் தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்த வில்லை. மேலும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்து அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
எனவே அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மிளானி மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் அதிகாரி, அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் வரும் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தார்.