இது தொடர்பாக சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு படிப்படியாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் வருவாய் இழந்துள்ள நிலையில், தன்னைப்போல குறைவான வருவாய் ஈட்டுவோர் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அது நம்முடன் தான் இருக்கும் என்பதால், தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்ற அரசு விதித்துள்ள நிபந்தனைகளை கடைபிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும் என மே 17ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.