சென்னை:நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன்(51) என்பவரை 24ஆம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரைப் புலியை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பிறப்பித்துள்ளார்.
இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.