தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மயூரா ஜெயக்குமாரை தகுதியான வேட்பாளராக அறிவித்த உத்தரவுக்கு தடை கோரி வழக்கு - Congress candidate Mayura Jayakumar nomination issue

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரை தகுதியான வேட்பாளராக அறிவித்த தேர்தல் ஆணைய உத்தரவிற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமார்

By

Published : Mar 25, 2021, 8:04 PM IST

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அவரது மயூரா ரேடியோஸ் நிறுவனத்திற்காக கோவையைச் சேர்ந்த சீனு எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து மின்னணு சாதனங்களை வாங்கியதில், மீதித்தொகை தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது வேட்புமனுவில் இந்தக் கடன் குறித்த தகவலை தெரிவிக்காததால், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் சீனு எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான பிரபு தேவராஜன் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அதைக் கருத்தில்கொள்ளாமல் மயூரா ஜெயக்குமாரின் மனு ஏற்கப்பட்டுவிட்டதால், அவரை வேட்பாளராக அனுமதித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென சீனு எண்டர்பிரைசஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கபடுகிறது.

ABOUT THE AUTHOR

...view details