சென்னையில் வேப்பேரி அருகே ஆற்காடு லூர்தன் சர்ச் மகளிர் விடுதியில் தங்கி அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருபவர் செல்வ மெரின். இவர் இன்று காலை தனது பணிக்குச் செல்வதற்காக விடுதியிலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் செல்வ மெரின் எதிர்பாராத நேரத்தில் அருகில் சென்று, அவர் கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு முன்பே கொள்ளையர்கள் துணிகரமாக இச்செயலை செய்துள்ளனர்.