பள்ளிக்கல்வித்துறை மற்றும் இதரத்துறைகளில் காலியாக உள்ள உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆசிரியர் பணியிடங்களில் 1,325 இடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணப்பங்களை பெற்றது. அதனடிப்படையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
அதில் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களில் முதலில் 551 பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் அளித்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 142 தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.