தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி - ceo

சென்னை: பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

By

Published : Aug 9, 2019, 4:17 AM IST

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “ திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ராஜேந்திரன் சென்னை மாவட்டத்திற்கும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய திருவளர்செல்வி திருவள்ளூர் மாவட்டத்திற்கும், முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய பூபதி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் செந்தில் வேல்முருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்துணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த முருகேசன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணியாற்றி வந்த மூன்று பேர் பதவி உயர்வு மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

உடுமலைப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்டக் கல்வி அலுவலர் வேதரத்தினம், தொடக்கக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குனர் பணியிலும், திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் ராமன் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்படுகின்றார்.”, என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details