தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக தேர்தல் விளம்பரங்களுக்கு தடை - திமுக

சென்னை: அதிமுக செய்யும் இரண்டு தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

sahu

By

Published : Apr 15, 2019, 7:42 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தேர்தல் பரப்புரை நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

இந்நிலையில், திமுக-வுக்கு எதிராக இலங்கை பிரச்னை மற்றும் நில அபகரிப்பு புகார்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிகளில் அதிமுக செய்யும் தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்ய திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், தலைமைக்கழக வழக்கறிஞர்கள் நீலகண்டன் மற்றும் அருண் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், தொலைக்காட்சிகளில் வந்த அதிமுக விளம்பரங்கள் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால் அவைகளை ஒளிபரப்ப தடைவிதித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details