தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 10, 2020, 7:07 PM IST

Updated : Jun 10, 2020, 9:10 PM IST

ETV Bharat / city

சொட்டு நீர் பாசனத்திற்காக 478 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

சென்னை: சொட்டு நீர் பாசனத்திற்காக நபார்டு வங்கி வாயிலாக 478 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

drop water irrigation
drop water irrigation

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரதமரின் வேளாண் நீர் பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியான 'ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்' என்ற துணைத் திட்டத்தை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்திவருகிறது.

இந்தத் திட்டம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளைப் பயன்படுத்தி வயல்களில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த உதவுகிறது. சொட்டு நீர் பாசன தொழில்நுட்பம் நீரைச் சேமிக்க உதவுவதோடு, உரப் பயன்பாடு, தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட பிற செலவினங்களையும் கணிசமாகக் குறைக்கிறது.

நடப்பு ஆண்டில், இத்திட்டத்திற்காக 4,000 கோடி ரூபாய் வருடாந்திர ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தில் பயனடையக்கூடிய பயனாளிகளை மாநில அரசுகள் கண்டறிந்துள்ளன. இதற்காக நபார்டு வங்கியுடன் இணைந்து, 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள குறுநீர் பாசன நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, குறுநீர் பாசன நிதியாக தமிழ்நாட்டுக்கு 478.79 கோடி ரூபாயும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 616.14 கோடி ரூபாயும் நபார்டு வங்கி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதி விடுவிப்பு!

Last Updated : Jun 10, 2020, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details