தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை - Central team visits Chennai to assess rain damage

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட மத்தியக் குழு சென்னை வந்தது.

சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை
சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை

By

Published : Nov 21, 2021, 4:09 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகம் பதிவாகியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், நிதித்துறை ஆலோசகர், விவசாயத்துறை இயக்குநர், நீர்வளத்துறை இயக்குநர்கள் பாவியா பாண்டே, ஆண்பிகவுல், விஜயராஜ் மோகன், வரபிரசாத் உள்ளிட்ட ஏழு அலுவலர்கள் வருகை புரிந்துள்ளனர்.

இந்த மத்திய குழு நாளையும் நாளை மறுநாளும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்!

ABOUT THE AUTHOR

...view details