மே 25ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுழற்சி முறையில் 250க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை முகாமில் தங்கி பணிபுரியும் வீரர்களுக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை முகாமிற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.