ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை நேரில் தந்த அவரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் ஒத்திகை மையத்தில் அமைக்கப்பட்டிருந்த காத்திருக்கும் அறை, கோ-வின் செயலியை கையாளுவதற்கான பயனாளர் உறுதிப்படுத்தும் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, கண்காணிப்பு அறை, குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அங்கிருந்த மருத்துவர்களும், செவிலியர்க்கும் விளக்கமளித்தனர்.
தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதற்கான போதுமான இட வசதி, 2 மணி நேரத்தில் 25 பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டமைப்புகள், தடுப்பூசி செலுத்தப்பட்ட பயனாளர்களுக்கு உடனடி பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கான முதலுதவி சிகிச்சைகள், பயனாளர்களின் விவரங்களை கையாளும் கோ-வின் செயலி மூலம் பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்டவை இந்த ஒத்திகையின் போது சரிபார்க்கப்பட்டது.
மேலும், கரோனா சிகிச்சை மைய சிடி ஸ்கேன் கூடத்தையும், கரோனாவிற்கு பிந்தைய சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் யோகாசன பயிற்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.