தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யாராக இருப்பினும் உண்மை வெளிக்கொணரப்படும்! - உயர்கல்வித் துறை செயலாளர்

சென்னை: மாணவியின் தற்கொலை சம்பவத்தில் உண்மை வெளிக்கொணரப்படும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

iit fathima latif

By

Published : Nov 18, 2019, 2:25 AM IST

சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டதின் பேரில் உயர்கல்வித் துறை செயலாளர் சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் இன்று விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “இன்று நான் ஐ.ஐ.டி வளாகத்தின் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மாணவி ஃபாத்திமா தற்கொலை குறித்து விசாரித்தேன்.

திறமையான மாணவியின் மரணம் தொடர்பாக விசாரிக்கக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி உள்ளேன். மிகவும் திறமையை வாய்ந்த மாணவியை இழந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. மாணவியின் மரணம் தொடர்பாக தகுதியான அலுவலர்களால் சரியான மற்றும் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

ஃபாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது - மு.க. ஸ்டாலின்

எனவே, மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் இருப்பார்களானால் நிச்சயமாக அவர்கள் யாராக இருப்பினும் உண்மை வெளிக்கொணரப்படும். இச்சூழலில் நான் அனைவரையும் கேட்டுக்கொள்வதெல்லாம், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற பேரில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்பதே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details