சி.பா. ஆதித்தனாரின் 115ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ் மொழியை அழித்து ஒழிக்க வேண்டும் என்று பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கொண்டுவருவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். ராமாயணம், மகாபாரதம் போன்றவை புராண கதைகள்தான்.
ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கொண்டுவந்திருப்பது அவர்களின் கல்வியை பாதிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் நான்கு அடி பாய்ந்தால் அதிமுக எட்டு முதல் பதினாறு அடி பாய்கிறது.