தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மத்திய அரசு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையில் உள்ள காலத்திற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடையாது என்று அறிவித்து உள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கரோனோ வைரஸ் ஒழிப்புப் பணியில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறை, துப்புரவுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அர்ப்பணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில், அவர்களின் அகவிலைப்படியை நிறுத்திவைப்பது என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது எந்தவிதத்தில் நியாயம்? இது ஊழியர்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் ஆகும்.
இதையும் படிங்க:மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஓராண்டு நிறுத்தம்