சென்னை வள்ளலார் நகரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “வடசென்னை மக்கள் மேம்பாட்டிற்காக குறுகிய நாட்களில் தொலைநோக்கு திட்டம் பல அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை.
திமுக என்றுமே தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக நடத்துகிற கட்சி. எனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவு என்றைக்குமே திமுகவுக்கு கிடைக்காது. அதிமுக பாஜக கூட்டணி குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு பேசியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இக்கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.