தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டிற்கு 50 ஆயிரம் கோவேக்ஸின் அனுப்பிய மத்திய அரசு!

சென்னை: தமிழ்நாட்டிற்கு 50 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

Central government sends 50,000 vaccine to Tamil Nadu!
Central government sends 50,000 vaccine to Tamil Nadu!

By

Published : May 14, 2021, 10:24 PM IST

தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பல கரோனா மையங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

குறிப்பாக, கோவேக்ஸின் தடுப்பூசிக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோவேக்ஸின் தடுப்பூசியை முதல் தவணை போட்டவர்கள் 28 நாள்கள் முடிவடைந்தும் 2ஆம் தவணை போட்டுக்கொள்ள முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திலிருந்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியது.

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்கிலிருந்து தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details