தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த முடியாது - மத்திய அரசு - அன்னிய மரங்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தின்படி காடு வளர்ப்பு திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட, வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

central-government-says-mgnrega-scheme-funds-cannot-be-used-to-remove-alien-trees-growing-in-western-ghats மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த முடியாது - மத்திய அரசு மறுப்பு
central-government-says-mgnrega-scheme-funds-cannot-be-used-to-remove-alien-trees-growing-in-western-ghatsமேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த முடியாது - மத்திய அரசு மறுப்பு

By

Published : Apr 26, 2022, 11:11 AM IST

சென்னை: தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் நேற்று (ஏப்ரல்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் எனவும், அன்னிய மரங்களை அகற்ற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தின்படி காடு வளர்ப்பு திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட, வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படாததால் அந்த நிதியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆளுநர் மாளிகை எதற்கு?- விசிக கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details