மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி டிஏ (Dearness Allowance) உயர்வுக்காக பல வாரங்களாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த மாதம் அகவிலைப்படி 3 சதவீதம் வரை டிஏ உயர்வு இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயன் பெறுவார்கள்.
2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது 31 சதவீதம் அகவிலைப்படி டிஏ பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்த்தப்படும்போது, 34 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும். 34 சதவீதமாக டிஏ உயர்த்தப்படும் பட்சத்தில், அடிப்படை ஊதியம் பெறுபவர்கள் முதல் உயர் அலுவலர்கள் பணியில் இருப்பவர்கள் வரை அனைவரின் ஊதியமும் உயரும்.