தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழில் அஞ்சல் துறை தேர்வு எழுதலாம் - சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு! - top news in tn

Central government allows Postal exam in Tamil, தமிழில் அஞ்சல் துறை தேர்வு, இன்றைய முக்கிய செய்திகள், முக்கிய செய்திகள் இன்று, postal exams in tamil, tamil language, தமிழ் மொழி, சு வெங்கடேசன், su venkatesan news, mp su venkatesan, su venkatesan mp, top news in india, top news in tn, tamilnadu top news today
Postal exam in Tamil language

By

Published : Jan 15, 2021, 10:50 AM IST

Updated : Jan 15, 2021, 12:10 PM IST

10:41 January 15

சென்னை: அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் பணிக்கான தேர்வைத் தமிழர்கள், தாய்மொழித் தமிழில் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படுமென்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) சந்தோஷ் குமார் கமிலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம், ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிக்கை ஜனவரி 4 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான தேர்வுகள் பிப்ரவரி 14 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே தபால்காரர் பதவிக்கான பணி நியமனத் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுமென்று ஜூலை 2020ஆம் மாதம் மாநிலங்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்திருந்ததையும், தொடர்ந்து ஜூலை 30, 2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு இது போன்ற உறுதிமொழி அளித்ததையும் குறிப்பிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கர் பதவிகளுக்கான தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தேன்.  

இக்கோரிக்கையை ஏற்று அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) சந்தோஷ் குமார் கமிலா, சு. வெங்கடேசன் எம்.பி.க்கு 14.01.2021அன்று பதில் அனுப்பியுள்ளார்.  

அந்த கடிதத்தில், "தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம், ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகள் தொடர்பாக 04.01.2021 அறிவிக்கைக்கு பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மையப்படுத்தப்படாத துறைவாரித் தேர்வுகளை ஆங்கிலம், இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என்ற தெரிவு அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பின்னிணைப்பை இக்கடிதத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ளோம். நீங்கள் வெளிப்படுத்திய கவலைகள் இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன என நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனது கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய கோரிக்கையால் தமிழில் தேர்வுகள் நடைபெறுவது தேர்வர்களுக்கு ஒரு "சமதள ஆடு களத்தை" ஏற்படுத்தித் தருவதாகும். மேலும் அந்தந்த மாநிலங்களில் மக்களுக்கு சேவை ஆற்றுபவர்களுக்கு மாநில மொழிகளில் தேர்ச்சி என்பதே முக்கியம். அதுவே, மக்களுக்கான சேவையையும் வலுப்படுத்த உதவும்.  

இன்னும் கூடுதலாக சொல்வதானால் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக தமிழ்நாடு என்றும் முன் வரிசையில் நிற்கும் என்பதையும் உறுதி செய்வதாகும். ஆகவே, எல்லா மத்திய அரசுப் பணிகளிலும், மத்தியப் பொதுத் துறை நியமனங்களிலும் தமிழுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய எனது முயற்சிகள் தொய்வின்றி தொடரும்.

இப்பின்னணியில் ஜனவரி 14ஆம் தேதியிட்ட பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்குரிய வகையில் விண்ணப்பப் படிவத்தின் 12ஆவது அம்சமும் மாற்றப்பட்டு திருத்தப்பட்ட படிவம் வெளியிடப்பட்டுள்ளது' என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 15, 2021, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details