தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டிலும் சோதனை - மத்தியக் குற்றப்பிரிவு அதிரடி - செந்தில் பாலாஜி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர், சென்னை வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

raid
raid

By

Published : Jan 31, 2020, 12:47 PM IST

அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்த செந்தில் பாலாஜி, பின்னர் திமுகவில் இணைந்து கரூர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீடுகளிலும், அவருடைய சகோதரர் வீட்டிலும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை மந்தைவெளியில் திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டிற்கு இன்று காலை வந்த மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், வீடு பூட்டப்பட்டிருந்ததால், கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவலர்கள், வீட்டிற்கு சீல் வைத்தனர். இதனையடுத்து, பூட்டை உடைத்து அவர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டிலும் சோதனை - மத்தியக் குற்றப்பிரிவு அதிரடி

கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரப்பட்டி செந்தில் பாலாஜியின் வீடு, கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி கடந்த 2011-2016 ஆம் ஆண்டுகளில் அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீடு, கடைகளில் போலீசார் திடீர் சோதனை

ABOUT THE AUTHOR

...view details