சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-150, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள போரூர் மின்சார மயானத்தில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி (சிம்னி) பழுதடைந்த காரணத்தினால், மே 3 முதல் மே 22 வரை 20 நாட்களுக்கு இயங்காது என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுடுகாட்டில் பராமரிப்புப்பணி - சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு! - cemetery
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் சிக்னல் அருகில் உள்ள மின்சார மயானத்தில் தொடர்ந்து பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், பொதுமக்கள் வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்சார மயானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வளசரவாக்கத்தில் 25 நாட்களுக்கு மயான பூமி இயங்காது - மாநகராட்சி
தற்பொழுது சீர்செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதனால் மேலும் 25 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-149க்கு உட்பட்ட வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்மயானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க:இடுகாட்டில் புதைக்க இடம் மறுப்பு.. சாலையோரம் எரிக்கப்பட்ட தலித் பெண்ணின் சடலம்..
Last Updated : May 23, 2022, 5:58 PM IST