தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகை சித்ரா மரணம் குறித்து செல்போன், சிசிடிவி கேமரா ஆய்வு! - சின்னத்திரை நடிகை மரணம்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து, அவரது கணவர் ஹேம்நாத்திடம் 2ஆவது நாள் விசாரணை முடிந்தவுடன் காவல் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

chitra
chitra

By

Published : Dec 11, 2020, 7:17 AM IST

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் உணவு விடுதியில் நேற்று முன்தினம் (டிச. 09) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் உடற்கூராய்வு முடிந்து நேற்று (டிச. 10) இறுதிச் சடங்கு முடிவடைந்தது. இந்த விவகாரத்தில் கடந்த இரண்டு தினங்களாக அவரது கணவர் ஹேம் நாத்திடம் நசரத்பேட்டை காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று இரண்டாவது நாள் விசாரணை முடிவுற்று மீண்டும் நாளை விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

மேலும் சித்ராவின் செல்போன், தனியார் விடுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.

இதில் சித்ரா செல்போனில் கடைசியாகப் பேசிய பதிவுகள் அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஆகியவற்றைத் தீவிரமாகச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் ஹேம்நாத் கூறுவதும் ஒத்துப்போனால் பாதிப்பு இருக்காது என்றும் இதில் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல்கள் வெளியானால் ஹேம் நாத் கைதாவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் புதிய குழப்பம்

ABOUT THE AUTHOR

...view details