தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து குளிரவைத்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பலத்த காற்றால் கீழே சாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரம் - காற்றுடன் சென்னையில் மழை
சென்னை: பலத்த காற்று வீசியதால் திருவல்லிக்கேணி பகுதியில் நிறுவப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.
Cell phone tower fallen due to heavy wind
இந்நிலையில், பலத்த காற்று வீசியதன் காரணமாக திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் கட்டடத்தில் நிறுவப்பட்டிருந்த தொலைதொடர்பு கோபுரம் சாய்ந்து விழுந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்தப் பகுதி முழுவதும் சாலைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.