தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சி.டி.ரவியின் கருத்தே இறுதியானது' - எல்.முருகன்

சென்னை: அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து, தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியின் கருத்தே இறுதியானது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரவித்தார்.

l-murugan
l-murugan

By

Published : Jan 12, 2021, 3:58 PM IST

Updated : Jan 12, 2021, 4:08 PM IST

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "வரும் 14ஆம் தேதி மதுரவாயலில் நடக்கும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.

எல்.முருகன்

அதையடுத்து அவர், தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. அந்நாளன்று நான் காவடி எடுத்து பழனிக்கு செல்ல உள்ளேன். அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தது இறுதியானது. இட ஒதுக்கீட்டை தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் பாஜக ஆதரிக்கிறது.

உள் ஒதுக்கீடு குறித்த பாமகவின் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம். உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் கூட்டங்களில் அவரை வருங்கால முதலமைச்சர் அவரது கட்சியினர் கூறிவருகின்றனர். முதலில் திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜே.பி.நட்டா...!

Last Updated : Jan 12, 2021, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details